ஜீவபுஸ்தகத்திற்கும் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திற்கும் வித்தியாசம் உள்ளதா?

கேள்வி ஜீவபுஸ்தகத்திற்கும் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திற்கும் வித்தியாசம் உள்ளதா? பதில் புதிய ஏற்பாட்டில் “ஜீவபுஸ்தகம்” பற்றி எட்டு குறிப்புகள் உள்ளன, அவற்றில் இரண்டு குறிப்பாக ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமான ஜீவபுஸ்தகத்தைக் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஏழு குறிப்புகள் வருகின்றன. ஜீவபுஸ்தகத்தில் பெயர்கள் எழுதப்பட்டவர்கள் தேவனைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நித்திய ஜீவனை அடைந்தவர்கள். ஜீவபுஸ்தகத்தில் (பிலிப்பியர் 4:3) பெயர்கள் உள்ளவர்கள் என்று தன்னுடன் வேலைச்செய்தவர்களை பவுல் குறிப்பிடுகிறார், நித்திய இரட்சிப்பைக் கொண்டவர்களின் பெயர்களின் பதிவாக ஜீவபுஸ்தகத்தை மீண்டும் அடையாளம்…

கேள்வி

ஜீவபுஸ்தகத்திற்கும் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திற்கும் வித்தியாசம் உள்ளதா?

பதில்

புதிய ஏற்பாட்டில் “ஜீவபுஸ்தகம்” பற்றி எட்டு குறிப்புகள் உள்ளன, அவற்றில் இரண்டு குறிப்பாக ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமான ஜீவபுஸ்தகத்தைக் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஏழு குறிப்புகள் வருகின்றன. ஜீவபுஸ்தகத்தில் பெயர்கள் எழுதப்பட்டவர்கள் தேவனைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நித்திய ஜீவனை அடைந்தவர்கள்.

ஜீவபுஸ்தகத்தில் (பிலிப்பியர் 4:3) பெயர்கள் உள்ளவர்கள் என்று தன்னுடன் வேலைச்செய்தவர்களை பவுல் குறிப்பிடுகிறார், நித்திய இரட்சிப்பைக் கொண்டவர்களின் பெயர்களின் பதிவாக ஜீவபுஸ்தகத்தை மீண்டும் அடையாளம் காண்கிறார். அவ்வாறே, வெளிப்படுத்துதல் 3:5-ல் தேவனுடைய விசுவாசிகளின் பெயர்கள் காணப்படும் ஜீவபுஸ்தகத்தைக் குறிக்கிறது. இவர்கள் தங்களின் இரட்சிப்பு உண்மையானது என்பதை நிரூபித்து, பூமிக்குரிய வாழ்க்கையின் சோதனைகளை வென்றவர்கள். இந்த வசனம் ஜீவபுஸ்தகத்தில் ஒரு பெயர் எழுதப்பட்டவுடன், இயேசு அதை ஒருபோதும் அழிக்க மாட்டார் என்று உறுதியளிக்கிறார், நித்திய பாதுகாப்பு கோட்பாட்டை மீண்டும் நிரூபித்தார். வெளிப்படுத்தலின் இந்த பகுதியில் சபைகளிடத்தில் பேசும் கர்த்தராகிய இயேசு, தனது பிதாவுக்கு முன்பாக தமக்கு சொந்தமாணவர்களை ஒப்புக்கொள்வதாக உறுதியளிக்கிறார். மாறாக, வெளிப்படுத்தல் 20:15 ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்களின் தலைவிதியை வெளிப்படுத்துகிறது—அது அக்கினிக்கடலில் நித்தியமாக அனுபவிக்கும் வேதனை.

வெளிப்படுத்துதல் 13:8 மற்றும் 21:27 இல், “ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம்” பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம், அதில் ஆட்டுக்குட்டியானவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அனைவரின் பெயர்களும் உள்ளன. “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட” ஆட்டுக்குட்டியானவர் ஒரு புத்தகத்தைக் கொண்டுள்ளார், அதில் அவருடைய பலியால் மீட்கப்பட்ட அனைவரின் பெயரும் எழுதப்பட்டுள்ளன. அவர்கள்தான் பரிசுத்த நகரமான புதிய எருசலேமுக்குள் நுழைவார்கள் (வெளிப்படுத்துதல் 21:10) மற்றும் தேவனுடன் பரலோகத்தில் என்றென்றும் வாழ்வார்கள். ஆட்டுக்குட்டியானவர் மூலம் நித்திய ஜீவனைப் பெற்ற அனைவரையும் பதிவு செய்யும் ஜீவபுஸ்தகம் என்பதால், ஜீவபுஸ்தகமும் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகமும் ஒன்றே என்பது தெளிவாகிறது.

[English]



[முகப்பு பக்கம்]

ஜீவபுஸ்தகத்திற்கும் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திற்கும் வித்தியாசம் உள்ளதா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *