மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

கேள்வி மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா? பதில் “இடைப்பட்ட நிலை” என்பது ஒரு இறையியல் கருத்தாகும், இது பரலோகத்தில் உள்ள விசுவாசிகள் தங்கள் சரீரங்கள் உயிர்த்தெழுப்பப்படுவதற்கு காத்திருக்கும் போது எந்த வகையான சரீரத்தைக் கொண்டுள்ளனர் என்பது பற்றி ஊகிக்கப்படும் கருத்தாகும். மரித்துப்போன விசுவாசிகள் கர்த்தருடன் இருக்கிறார்கள் என்று வேதாகமம் தெளிவுபடுத்துகிறது (2 கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர் 1:23). மேலும் விசுவாசிகளின் உயிர்த்தெழுதல் இன்னும் நிகழவில்லை என்பதையும் வேதாகமம் தெளிவுபடுத்துகிறது, அதாவது மரித்துப்போன விசுவாசிகளின் சரீரங்கள் இன்னும் கல்லறையில்…

கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்

“இடைப்பட்ட நிலை” என்பது ஒரு இறையியல் கருத்தாகும், இது பரலோகத்தில் உள்ள விசுவாசிகள் தங்கள் சரீரங்கள் உயிர்த்தெழுப்பப்படுவதற்கு காத்திருக்கும் போது எந்த வகையான சரீரத்தைக் கொண்டுள்ளனர் என்பது பற்றி ஊகிக்கப்படும் கருத்தாகும். மரித்துப்போன விசுவாசிகள் கர்த்தருடன் இருக்கிறார்கள் என்று வேதாகமம் தெளிவுபடுத்துகிறது (2 கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர் 1:23). மேலும் விசுவாசிகளின் உயிர்த்தெழுதல் இன்னும் நிகழவில்லை என்பதையும் வேதாகமம் தெளிவுபடுத்துகிறது, அதாவது மரித்துப்போன விசுவாசிகளின் சரீரங்கள் இன்னும் கல்லறையில் உள்ளன (1 கொரிந்தியர் 15:50-54; 1 தெசலோனிக்கேயர் 4:13-17). எனவே, பரலோகத்தில் உள்ள விசுவாசிகளுக்கு உயிர்த்தெழுதல் வரை தற்காலிகமாக சரீரங்கள் கொடுக்கப்படுகிறதா அல்லது பரலோகத்தில் உள்ள விசுவாசிகள் உயிர்த்தெழுதல் வரை ஆவிக்குரிய/சரீரமற்ற வடிவத்தில் இருக்கிறார்களா என்பது இடைப்பட்ட நிலையின் கேள்வியாகும்.

இடைப்பட்ட நிலையைப் பற்றி வேதாகமம் பெரிய அளவிலான விவரங்களைக் கொடுக்கவில்லை. ஆனால் மறைமுகமாக, குறிப்பாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசும் ஒரே வேதப்பகுதி வெளிப்படுத்துதல் 6:9 ஆகும், “…தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.” இந்த வசனத்தில் யோவானுக்கு கடைசிக் காலத்தில் விசுவாசத்தின் நிமித்தமாகக் கொல்லப்படுபவர்களின் தரிசனம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தரிசனத்தில் கொல்லப்பட்ட அந்த விசுவாசிகள் பரலோகத்தில் தேவனுடைய பலிபீடத்தின் கீழ் உள்ளனர் மற்றும் அவர்கள் “ஆத்துமாக்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த ஒரு வசனத்திலிருந்து, இடைப்பட்ட நிலைக்கு வேதாகமத்தில் பதில் இருந்தால், பரலோகத்தில் உள்ள விசுவாசிகள் உயிர்த்தெழுதல் வரை ஆவிக்குரிய / சரீரமற்ற வடிவத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

விசுவாசிகளுக்கு இறுதியில் காத்திருக்கும் பரலோகம் புதிய வானங்களும் புதிய பூமியும் ஆகும் (வெளிப்படுத்துதல் 21-22). பரலோகம் உண்மையில் ஒரு பௌதிக இடமாக இருக்கும். நமது சரீரங்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு மகிமைப்படுத்தப்படும், புதிய பூமியில் நித்தியத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். தற்போது, பரலோகம் ஆவிக்குரிய மண்டலமாக உள்ளது. அப்படியானால், விசுவாசிகள் ஆவிக்குரிய பரலோகத்தில் இருந்தால், தற்காலிகமாக சரீரங்கள் அவர்களுக்குத் தேவைப்படாது என்று தோன்றுகிறது. இடைப்பட்ட நிலை எதுவாக இருந்தாலும், பரலோகத்தில் உள்ள விசுவாசிகள் பரலோகத்தின் மகிமைகளை அனுபவித்து, கர்த்தருடைய மகிமையை ஆராதிப்பதில் பரிபூரணமாக திருப்தி அடைகிறார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

[English]



[முகப்பு பக்கம்]

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *